புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2015

யாழ் ஊடகவியலாளர் அதிரடிக் கைது


யாழ்.நல்லூர் பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியின் பிரதான முறைப்பாட்டாளரும், தனியார் தொலைக்காட்சியின் பிராந்திய செய்தியாளருமான தம்பித்துரை பிரதீபன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டு, அவர் தங்கியிருந்த வீடு உடைத்து உட்சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது எதற்காக இடம்பெறுகின்றது? என்பது இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற ஒரு சங்கிலி அறுப்பு சம்பவத்துடன் குறித்த ஊடகவியலாளருடன் தங்கியிருந்த நபர் ஒருவருக்கு தொடர்புள்ளது என பொலிஸார் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் குறித்த சம்பவம் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்றே புலனாகின்றது.
குறித்த ஊடகவியலாளர் யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் உள்ள வீடு ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்களுடன் வாடகைக்கு வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில் நல்லூர் பகுதியில் பொலிஸார் ஊடகவியலாளர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தமைக்கான பிரதான முறைப்பாட்டாளராகவும் இவரே இருக்கின்றார்.
இதேபோன்று நேற்றைய தினமும் யாழ்.பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பினை எடுத்து கொலை முயற்சியுடன் தொடர்புடைய முறைப்பாட்டை வாபஸ் பெறுங்கள் என கேட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை ஒரு மணியளவில் கம்பிகள், பொல்லுகளுடன் முதலில் வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார், பின்னர் வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்சென்று மின் விளக்குகளை அணைத்து விட்டு அங்கிருந்த இளைஞர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.
இதற்குள் ஊடகவியலாளர் பிரதீபனும் உள்ளடக்கம். இந்த நிலையில் சந்தேகத்தை வலுக்கச் செய்யும் காரணிகளாக கைது செய்யப்பட்டபோது காரணம் என்ன? என்பதை பொலிஸார் குறிப்பிடவில்லை.
மேலும் குறித்த கைது ஒரு சங்கிலி அறுப்பு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதெனில் குற்றவாளிகள் எங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய அங்க அடையாளங்கள் என்ன? என்பதையெல்லாம். கேட்டு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக வரலாற்றிலேயே இல்லை.
ஊடகவியலாளர்கள் மீது கொலை முயற்சி குறித்து,  முறைப்பாடு கொடுக்கச் சென்றபோதே சென்று நாளை வாருங்கள் என கூறிய பொலிஸார் அதேபோன்று நீண்ட தாமதத்தின் பின்னர் முறைப்பாட்டை எடுத்து, பின்னர் மிக நீண்ட தாமதத்தின் பின்னரே திருடர்களை பிடிப்பதும், பிடிக்க முடியவில்லை என அறிவிப்பதும் இருக்கும்.
இந்நிலையில் திடீர் சுற்றிவளைப்பும், கைதும் ஊடகவியலாளர் நேரடியாக, குறிவைக்கப்பட்டதற்கான சாட்சிகளாகவே இருக்கின்றன.

ad

ad