புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

தேர்தலை நடாத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நாட்டமில்லை: விஜயகலா


ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தான் தேர்தலை நடத்த வேண்டும் என்ற
நிலைப்பாட்டில் உள்ளதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தேர்தலை நடத்த விருப்பமில்லை என்றும் குறிப்பிட்டார்.
 
யாழ்ப்பாணம் அல்லாரையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் பயிற்சி பெற்ற 35 பயனாளிகளுக்கான நேற்றைய தினம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தேர்தல் காலத்தில் முன்னாள் மீன்பிடி அமைச்சரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான
ராஜித சேனாரட்ன வழங்கிய வாக்குறிதிகளான,
 
ஆயுதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த விக்கிரமதுங்க  மற்றும் ஊடகவியாலாளர்கள் குறித்த விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 
எனினும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தற்போது தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பேசப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டார்.
 
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

ad

ad