புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

வட பிராந்திய இ. போ.ச வன்னி, யாழ் என பிரிப்பு; ஆளும்கட்சி அரசியல்வாதியின் அதிரடி நடவடிக்கை


இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டுள்ளது. 
 
அரசியல் வாதி ஒருவரின் தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த மாற்றம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து  சபைக்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் போக்குவரத்து சபையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
 
ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த இருந்த அஸ்கர் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய முகாமையாளராக நேற்று முன்தினம்  முதல் கேதீஸன்  நியமிக்கப்பட்டார்.
 
இந்தநிலையில் வடமாகாண போக்குவரத்து சபை இரண்டாக பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கேதீஸ முகாமையாளராகவும்,  வன்னிக்கு அஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய 7 சாலைகளை கொண்ட வட பிராந்தியத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் , கிளிநொச்சி ஆகியவற்றை யாழ். பிராந்தியமாகவும் மன்னார் வவுனியா, முல்லைத்தீவு ஆகியவற்றைக் கொண்ட வன்னி பிராந்தியமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.  
 
வடக்கு மாகாணத்தில் இவ்வாறு இரண்டு பிரிவுகள்  இருப்பதனை தாங்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை என்றும்  ஆளும் கட்சி அரசியல்வாதியின்  தனிப்பட்ட முடிவாகவே இது அமைந்துள்ளது என்றும்  போக்குவரத்து சபையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 
 
இதேவேளை, ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த அஸ்கர் ஊழல் மோசடியிலேயே இடமாற்றம்  செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad