புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2015

முக்கிய தலைவர்கள் சோமவன்சவுடன் இணைவதால் மீண்டும் பிளவு படும் நிலையில் ம.வி.மு


ரில்வின் சில்வா, கே.டி.லால்காந்த, விமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோமவன்ச அமரசிங்க அக்கட்சியின் செயற்பாடுகளின் காரணமாக அதிருப்தியடைந்துள்ள ஆதரவாளர்களுக்கு தலைமைத்துவம் வழங்கும் வகையில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த தலைவர்கள் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி செல்ல தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக அக்கட்சியின் அனைத்து முக்கிய உறுப்பினர்களும் சோமவன்சவுடன் இணைவதினால் கட்சி பாரிய பிளவுகளை சந்திக்க நேரிடும்.
இதேவேளை விமல் வீரவன்ச 1989ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு மே மாத நடுப்பகுதி வரை மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவராக இருந்தார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக விமல் வீரவன்ச கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தும், அதன் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியை ஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad