புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2015

இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் பாரிய நிதி மோசடி


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2 கோடியே 29 இலட்சத்து 2 ஆயிரத்து 965 ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான 6 வருட காலப்பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சுக்கும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கும் இலங்கையின் கணக்காய்வு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன்படி களுத்துறை பிரதேசத்தில் மைதானமொன்றை மேம்படுத்துவதற்காக இத்தாலியில் இருந்து கிடைத்த 62 இலட்சத்து 87 ஆயிரத்து 670 ரூபா, 2008ம் ஆண்டு இலங்கையில் ஆசிய கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்ற போது கிடைத்த 64 இலட்சத்து15 ஆயிரத்து 290 ரூபா,
சுனாமி நிவாரணத் திட்டத்திற்காக தனியார் நிறுவனமொன்றில் இருந்து கிடைத்த 50 இலட்சம் ரூபா, 2008ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக கிடைத்த 52 இலட்சம் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளன.
இவற்றிலிருந்தே குறித்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad