புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2015

.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ இன்று வடக்கிற்கு விஜயம்


பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கிற்கு வருகின்றார். 
 
அவர் இங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலருடன் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார். 
 
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், 6 நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தடைந்தார். 
 
அவர் பலதரப்பட்டவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றார். இன்று வடக்கிற்கு வரவுள்ள அவர், இங்கு வடக்கு மாகாணசபையினர் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
 
மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad