புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2015

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அஞ்சுகிறது சுதந்திரக் கட்சி; ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்


ஜனாதிபதித் தேர்தலின் போது, வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக்
கலைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து இன்று முக்கிய கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படுவதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியமான தலைவர்கள் பலரும் விரும்பவில்லை. 
 
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையாலும் - பிளவுகளாலும் தற்போதைய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது ஆபத்தானது என்று கருதுகின்றனர்.
 
அதேவேளை, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதும், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலநறுவையில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் செயற்பட மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும், அவசரப்பட்டு அதனைக் கலைக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
அதேவேளை, 19 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டால், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விடும். இதனால் தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்காமல் அதனை ஆதரிக்க முடியாது என்று காரணம் கூறி, திருத்தச் சட்டத்த நிறைவேற்ற விடாமல் இழுத்தடிக்கவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்டுள்ளனர்.
 
இவ்வாறானதொரு நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய கூட்டம் கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தில் அவரது நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad