புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

வவு/ பூவரசங்குளம் கந்தன்குளம் புதுவருட விளையாட்டுப்போட்டி

வவு/ பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின்
ஏற்பாட்டில் சன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.ரவி தலைமையில் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி 25.04.2015 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா, கிராம அலுவலர், பூவரசங்குளம் பொலிஸ் அதிகாரி திரு.ராஜகுரு, கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு.யோகராசா, மாதர் சங்கத்தலைவி திருமதி.பத்மா, கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு கழகங்களின் வீரர்களுக்கு வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

ad

ad