புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2015

கடந்த அரசின் மடத்தனங்களை அம்பலப்படுத்திய மகிந்தவின் ஊடகப் பேச்சாளர்
கடந்த அரசாங்கம் சர்வதேச தொடர்புகளை முகாமைத்துவம் செய்வதில் மிகவும் மடமையுடன் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்று கொண்டு வரும் போது அதனை எதிர்கொள்வதற்காக இலங்கை சார்பாக சில இளைஞர், யுவதிகளே ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என அவர் கூறியுள்ளார்.
முற்போக்கு தேசிய முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச தொடர்புகளை முகாமைத்துவம் செய்வதில் கடந்த அரசாங்கம் மிகவும் மடமையாக செயற்பட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
மனித உரிமை பேரவையில் எமக்கு எதிராக யோசனை ஒன்று கொண்டு வரும் போது அதனை எதிர்கொள்ள, மிகவும் அறிவான, அனுபவம் உள்ள, சிறந்த ஆங்கில புலமைத்துவம் கொண்டவர்கள் இருந்தனர்.
எனினும் அரசாங்கம் அவர்களை விடுத்து இளைஞர்களையும் யுவதிகளையும் அனுப்பியது, இவர்கள் அங்கு சென்று கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்து, குடித்து சாப்பிட்டு விட்டு வந்தனர்.
இதனால், இலங்கைக்கு எதிராக முன்வைக்கபட்ட யோசனை நிறைவேற்றப்பட்டது.
அது மாத்திரம் அன்றி தமரா குணநாயகத்தை நீக்கியமை உட்பட பல மடத்தனமான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் மொஹான் சமரநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad