புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2015

சுவிசில் நடந்த த.தே.கூ. - த.தே.ம.மு. இணைவு பற்றி பேச்சு!

தற்போதைய செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாகவும்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் சுவிட்ஸர்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
 
அந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களான மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கோவிந்தன் கருணாகரனும் (ஜனா) பங்கேற்றுள்ளனர்.
 
சுவிட்ஸர்லாந்தில் உள்ள தமிழர் அமைப்பு ஒன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளை அழைத்து அண்மையில் கலந்துரையாடியிருந்தது. 
 
அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் கட்சியாகப் பதிவு செய்வது உட்படப் பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
 
தமிழர் தரப்புக் குரல்களை ஒன்றிணைப்பதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அமைப்பாக மாற்றுவதுமே இந்தக் கலந்துரையாடலில் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகின்றது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யவதன் அவசியம் குறித்து அதில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறான விடயங்களை உள்ளடக்கி குறித்த தமிழர் அமைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றையும் தயாரித்துள்ளது. ஆயினும் இவற்றுக்கு உடனடியாகப் பதில் வழங்க முடியாது என்று அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். 
 
அதையடுத்து அந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

ad

ad