புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2015

கடைகளில் பிரத்தியேக தராசு; பொருள் நிறைகளை நுகர்வோர் அறிய


பொருள்களின் நிறைகளை நுகர்வோர் சரியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் நாடளாவிய ரீதியில் விற்பனை நிலையங்கள் மற்றும்
பேக்கரிகளிலும் பிரத்தியேகமாக தராசு ஒன்று கட்டாயம் வைக்கப்படல் வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
 
இந்த நடைமுறைச் சட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டாயமாக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.
 
நுகர்வோரினால் கொள்வனவு செய்யப்படும் பொருள்கள் அவர்களினால் வழங்கப்படும் பணத்துக்கு ஏற்றவாறு இல்லை என்றும், அவைகளின் நிறை மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும், நுகர்வோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த நடைமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
முதற்கட்டமாக இது தொடர்பில் வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் தெளிவுப்படுத்தப்படவுள்ளது. இரண்டாம் கட்டமாகப் பிரத்தியேகமாக தராசு ஒன்று வைப்பதைக் கட்டாயப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad