புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2015

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்



இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர். 

இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அங்கு தொடர்ந்து வாழ்கின்றனர். மிகவும் அழகுநிறைந்த தீவு என்பது வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்புஅற்ற தீவாகஉள்ளது. வெளியுலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கு வசிக்கும் பழங்குடியினர் ஒருஎதிரியாகவே பார்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்தினர் யாரும் தொடர்பு கொள்ள முடியாது.

தீவை ஆய்வு செய்ய முயற்சி செய்யும் இந்திய விமானப்படை, ஹெலிகாப்டர்கள் மீது தீ பந்தம் மற்றும் கற்களை ஏய்தவர்கள். பழங்குடியின மக்கள் போட்டோ எடுக்கப்பட்டனர் என்பது மிகவும் அரிதானசம்பவமே. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படும் தெளிவானதாக இருக்கிறது என்றால், மிகவும் தெளிவற்ற நிலையிலே உள்ளது. பழங்குடியினர் வாழும் அந்த தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது. பாதுகாப்பை காரணம்காட்டி அரசு அவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிட்டுவிட்டது. தீவை சுற்றிலும் 3 மயில் தொலைவை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து உள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள அழகிய சென்டினல்....

வானில் இருந்து சென்டினல் தீவை பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது. மிகவும் அழகான காடுகள் மற்றும் கடற்கரைகள் உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் என யாரும் அங்கு கால் வைக்க முடியாது. பழங்குடியினர் வாழும் இந்த தீவுயாரும் கால்வைக்க முடியாது என்ற புகழைபெற்று உள்ளது. பழங்குடியின மக்கள் மார்டன் உலகத்தை சேர்ந்த மக்கள் தங்களை சந்திப்பதை மிகவும் தவிர்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்துடன் தொடர்பு என்பது முற்றிலும் கிடையாது. வெளியுலகத்தினரை அவர்கள் சந்திக்கும்போது அது மிகவும் மோசமான நிலையிலே முடிவடைகிறது. வெளியுலகத்தினர் தீவிற்கு வருவதை அவர்கள் பொறுத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு மீன் பிடித்த இரண்டு மீனவர்களை கொலை செய்துவிட்டனர்.

அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மீது தீ பந்தங்களை வீசியவர்கள், கற்களை வீசியவர்கள். இந்தியாவிற்கு சொந்தமான இந்திய தீவில் நடப்பது மிகவும் புரியாத புதிராகவே உள்ளது. வங்காள வரிகுடாவில் உள்ள இந்திய தீவில் 60 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர்கள் வசித்து வந்து உள்ளனர். ஆனால் அவர்களில் தற்போது எத்தனைபேர் உள்ளனர் என்பது தெளிவாகவில்லை. அவர்களுடைய மொழி, சடங்குள் என எதுவும் வெளியுலகத்திற்கு தெரியவரவில்லை.  பழங்குடியின மக்கள் போட்டோ எடுக்கப்பட்டனர் என்பது மிகவும் அரிதானசம்பவமே. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படும் தெளிவானதாக இருக்கிறது என்றால், மிகவும் தெளிவற்ற நிலையிலே உள்ளது. பழங்குடியினர் வாழும் அந்த தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது.

சுனாமியை அடுத்து ஆய்வு சென்ற இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மீது தீ அம்பு ஏய்யும் பழங்குடினர். இரண்டாவது படம்: பழங்குடியின மக்கள் கடற்கரையில் நிற்கும் தெளிவற்ற புகைப்படம். 

இருப்பினும் தீவில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் இருக்கலாம் என்று முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியானது தீவில் பாதிப்பை ஏற்படுத்தியதா என்பது இதுவரையில் தெளிவாகவில்லை, இந்தியாவின் அந்தமான் தீவுகளுடன் உள்ளது. இருப்பினும் சுனாமி அலையில் அடித்து இழுத்து செல்லப்படாலம் காத்துக் கொண்டனர். சுனாமியை அடுத்து, இந்திய கடலோர காவல்படையினரின் ஹெலிகாப்டர் மீது பழங்குடியினர் தீ அம்பு ஏய்தது தொடர்பான புகைப்படம் வெளியாகியது. இவர்கள் கற்கால பழங்குடியினர் என்றே கருதப்படுகின்றனர். சென்டினல் தீவே உலகில் மிகவும் தனிமை படுத்தப்பட்ட தீவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


பழங்குடியின மக்களை தொடர்பு கொள்ள இந்திய அரசானது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலே முடிந்தது. அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி அமைந்து உள்ள மன்ஹாட்டன் தீவை போன்று அமைந்து உள்ள சென்டினல் தீவில் பழங்குடியினர் விவகாரத்தில் தலையிடுவதை அரசு நிறுத்திக் கொண்டது. இதற்கிடையே சென்டினல் தீவில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்வது என்பது குற்றம் என்றும், தீவை சுற்றிலும் 3 மயில் தொலைவுக்கு செல்வது என்பது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக மக்கள் விதவிதமான உணவுகளை உட்கொள்ளும் நிலையில், தீவில் உள்ள மக்கள் கடல் உயிரினங்களை வேட்டையாடி உணவாக உட்கொண்டு வாழ்கின்றனர்.

சர்வைவல் இன்டர்நேஷனல் இயக்குனர் ஸ்டீபன் கொர்ரி பேசுகையில், இந்தியாவின் அந்தமான் தீவில் உள்ள பழங்குடியின மக்கள், 1800-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தபோது பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட, போ பழங்குடியினத்தை சேர்ந்த கடைசி ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இதேபோன்ற நிலை வடக்கு சென்டினல் தீவில் உள்ள பழங்குடியினருக்கும் ஏற்படாது, அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை அந்தமான் அதிகாரிகள் உறுதிபடுத்தவேண்டும். என்று தெரிவித்து உள்ளார்.

வெளியாட்களிடம் இருந்து எச்சரிக்கை இருந்தாலும் தீவில் உள்ளவர்கள்  உடல்நலத்துடனும், எச்சரிக்கையுடன், செழிப்புடனும் வாழ்கின்றனர், அவர்கள் பழைய வாழ்க்கை முறையுடனே வாழ்ந்து வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டின் இறுதி மற்றும் 1990-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆயுதம் தாங்கியவர்களுக்கும் - பழங்குடியினத்தவர்களுக்கும் இடையிலான மோதலில் பல பலங்குடியினர் உயிரிழந்தனர். ஆயுதம் தாங்கியவர்கள் உடந்தை கப்பல் பாகம் மற்றும் இரும்பை மீட்க சென்றவர்கள் என்று கூறப்படுகிறது.

ad

ad