புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

நீர் பிரச்சினை; விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதிமறுப்பு


வலிகாம நீர் பிரச்சினை தொடர்பிலான விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று
யாழ்.மாவட்ட செயலகத்தில் பாரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ள வலிகாம நீர் பிரச்சினை தொடர்பில் ஆராயும் பொருட்டு விசேட கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
 
மேற்படி கூட்டத்தில் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய அமைச்சர் மற்றும் வலிகாம பிரதேசசபைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இக் கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகவியளாலர்களுக்கு  வழங்கப்படவில்லை. இருப்பினும் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் விடைபெற்றுச் செல்லும் போது தனது வாகனத்தில் அமர்ந்தபடி ஊடகவியளாலர்களுக்கு ஒரு நிமிட உரை வழங்கினார்.
 
அதில்,
வலிகாம நீர் மாசடைந்துள்ளமை அறியப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆராயும் பொருட்டு வடமாகாண சபையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து நீர் மாசு தொடர்பிலான அறிக்கை குறித்த குழுவினரால் மிக விரைவில் சமர்ப்பிக்கப் படும் எனவும், அத்துடன் யாழ். நீர் நிலைகளிலுள்ள நீரினை எவ்வாறு மக்கள் பாவனைக்குட்படுத்துவது எனவும் ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

ad

ad