புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2015

பிரபல போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவி பேபி கைது

மும்பை போலீசாருக்கு நீண்ட காலமாக டிமிக்கி கொடுத்து வந்த மும்பை போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவியான  பேபி படங்கரை(53) போலீசார் இன்று கைது செய்தனர்.

மும்பையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் நம்பர் ஒன் புள்ளியாக இருந்து வந்த பேபி, இதன் மூலமாக பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் குவித்துள்ளார். இவருக்கென்று மும்பையிலும், மகாராஷ்டிராவின் இதர பகுதிகளிலும் 3 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

கடந்த 45 நாட்களாக 10 தனிப்படை போலீசார் இவரை தேடி வந்த நிலையில் இன்று சமூக நல பிரிவு போலீசார் மும்பை-பவுண்ட் செல்லும் பேருந்தில் இருந்த பேபியை பன்வல் என்ற இடத்தில் வைத்து கைது செய்தனர். 

மும்பை போலீஸ்காரர் தர்மராஜ் கலோகேவின் கள்ளக் காதலியான பேபியின், போதை பொருள் வியாபாரத்திற்கு தர்மராஜும் உடந்தையாக இருந்து வந்தார். அவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 22 கோடி மதிப்புள்ள 126 கிலோ போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பேபி தலைமறைவானார். தற்போது அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் அவரை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி பேபியை வருகிற 28-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளார்

ad

ad