புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2015

கிழக்கு மாகாண சபையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது


கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் நடவடிக்கையை அடுத்து இன்று தமிழிலும் மாகாண சபையில் தேசிய கீதம் இசைத்து வரலாறு படைத்துள்ளது.
அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து நல்லாட்சிக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்திய கிழக்கு மாகாண சபை, தேசிய கீதத்தை தமிழ் இசைக்கும் முன்மாதிரி ஒன்றையும் இன்று வெளிப்படுத்தியது.
கடந்த ஆட்சியில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் ஏற்பட்டிருந்த தடங்கலை மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி விடுவித்ததை அடுத்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இன ஒற்றுமைக்கு வித்திட்டுள்ளார்.
முதலமைச்சர் இதுகுறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
இலங்கை நாட்டில் இன்று நல்லாட்சி மலர்ந்துள்ள இவ்வேளையில் குழப்பம் விளைவிக்க சிலர் முன்வந்துள்ளனர்.
அவர்களின் கசட்டுத்தனமான எண்ணங்களை பறித்து வீசிவிடவேண்டும் என்றால் நாம் சகல இன, மொழி மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். அதன் ஒரு படியாக இன்று கிழக்கில் மொழியால் ஒற்றுமைப்பட்டிருக்கிறோம்.
கிழக்கு மாகாணத்தை ஏனைய மாகாண மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றியமைக்க என்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
இதற்காக அரசியல் வாதிகள், நல்ல சிந்தனையுள்ளவர்கள், மதத்தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் அனைவரும் கைகொடுக்குமாறு அன்பான அழைப்பு விடுக்கிறேன். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

ad

ad