புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2015

ராஜபக்சேயின் மற்றொரு தம்பியும் கைதாவாரா?



இலங்கையில் நிதி மோசடி வழக்கில், ராஜபக்சே தம்பி பசில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் மற்றொரு சகோதரரான கோத்தபயவும் இன்று ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிறார். அப்போது அவரும் கைது செய்யப்படலாம் என பரபரப்பு நிலவுகிறது.இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேன, கடந்த ராஜபக்சே அரசில் நடந்த முறைகேடு, ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து ஊழல் புகார்களை எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். இறுதிகட்ட போரின்போது விடுதலைப்புலிகள் அமைப்பிடம் இருந்து கைப்பற்றி பல கோடி ரூபாய், நகைகளை அபகரித்து வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ராஜபக்சே சகோதரரும், முந்தைய அரசில் அதிபரின் மூத்த ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சராகவும் இருந்த பசில் ராஜபக்சே நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடன் அவரது முன்னாள் செயர் நிஹால் ஜெயதிலக, மற்றொரு முன்னாள் அதிகாரி ரக் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடுவலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பசில் ராஜபக்சேவை மே 5ம் தேதி விசாரணை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.பசில், தனது பதவி காலத்தில் வாழ்வாதார மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தில் ரூ.3 கோடியே 29 லட்சம் மோசடி செய்ததாக சிறிசேன அரசால் வழக்கு பதிவுசெய்யப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்ததும், பசில் தனது மனைவி புஷ்பாவுடன் கொழும்புவில் இருந்து அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்தார். 

இதையடுத்து அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை இலங்கை நாடியது குறிப்பிடத்தக்கது.இதனிடையே ராஜபக்சேவின் மற்றொரு சகோதரரான கோத்தபய, ஊழல் புகார் விசாரணைக்காக இன்று காலை ஊழல் தடுப்பு ஆணையம் முன்பு ஆஜரானார்.  அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்தும், விடுதலை புலிகளிடம் கைப்பற்றி ய ஆயுதங்கள், தங்கம், ரொக்க பணம் ஆகிய விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் விசாரணை முடியாததால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த இலங்கை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அப்போது அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கையாக லஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

இதனால் போலீசாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.கைது செய்யுங்கள்: ராஜபக்சே ஆவேசம்மோசடி குற்றச்சாட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை நாடாளுமன்றத்தில் 113 எம்பிக்கள் கையெழுத்திட்டு 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து ராஜபக்சே ஆஜராக வேண்டிய அவசிம் இல்லை, அவரது வீட்டுக்கே சென்று ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என சபாநாயகர் அறிவித்தார். இதனிடையே பசில் கைது செய்யப்பட்டது குறித்து ஆவேசமாக பேசிய ராஜபக்சே, முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என தெரிவித்து உள்ளா

ad

ad