புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

அன்பழகன் மனு ஒத்திவைப்பு



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் வழக்கு தொடுத்தார்.

இவர் மனு மீது இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.  இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை கூறியதால், பவானிசிங் நியமனத்திற்கு எதிரான அவழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பி.சி.பந்த் ஆகிய மூன்று பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் எனவும்,  உச்சநீதிமன்ற நீதிபதி தத்து உத்தரவிட்டார்.  அவர் மேலும், இவ்வழக்கு மீதான விசாரணை ஏப்ரல் 21ம் தேதி நடைபெறும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

அதன்படி பவானிசிங் நியமனத்திற்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது அன்பழகன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் காலையிலும் பிற்பகலிலும் விசாரணை நடைபெற்றது.  

அன்பழகன் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா வாதிட்டார்.  அவர் காலை முதல் பிற்பகல் தொடங்கியும் வாதிட்டார்.  ஜெயலலிதா சார்பில் பாலி நாரிமன் வாதிட்டார்.

விசாரணைக்கு பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  

ad

ad