புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2015

இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது


இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார்.
மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C Young Researcher Award) உயிரியல் விஞ்ஞானம், ​​பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார் விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, 35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது.
சுந்தர் தனது கலாநிதி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் அவர் முன்னெடுத்த இலத்திரனியல் மற்றும் நீர் இயக்கவிசை தொடர்பான ஆராய்ச்சியொன்றுக்காக பெற்றுக்கொண்டார்.
இதுதவிர பொருளறிவியல் துறையில் பல்வேறு வெற்றிகர ஆராய்ச்சிகளை அவர் முன்னெடுத்துள்ளார்.
விருதினை வென்றமை தனக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் தனது பேராசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த ​கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
​சுந்தர் தன்னுடைய தற்போதைய இலட்சியமாக ​ பொருள்சார் பொறியியல் மற்றும் விஞ்ஞானவியலில் விரிவுரையாளராக விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ad

ad