புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2015

ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு கன்னட திதி.


மேகேதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டிக்கும் விதமாக கன்னட அமைப்பினர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் படங்களை வைத்து திதி கொடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் மேகதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டித்து கன்னட அமைப்பினர் இன்று பந்த் அறிவித்துள்ளனர்.
காவிரிக்கு குறுக்கே மேகதாது என்றபகுதியில் கர்நாடக அணை கட்ட திட்டமிட்டுள்ளதோடு இதற்காக நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.
இதனால், தமிழகத்துக்கு செல்லும் காவிரி நீர் தடுக்கப்படும் அபாயம் இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 500 கன்னட அமைப்புகள் பந்த் நடத்துகின்றனர்.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பந்த் மாலை 6 மணி வரை நடக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 12 மணி நேர பந்த் அறிவிப்பு காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்த்தால் தென் கர்நாடகாவில், குறிப்பாக, பெங்களூரு, மைசூரு மண்டலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
பெங்களூரு டவுன்ஹால் பகுதியில், சத்தியநாராயணா என்பவர் தலைமையில் ஒன்று கூடிய பல்வேறு கன்னட அமைப்புகள் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் அமாவாசை தினமான இன்று ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களை வைத்து வாழைப்பழம், ஊதுபத்தி, தேங்காய் ஆகியவற்றை வைத்து, பிண்டம் கொடுத்து, ஜெயலலிதா மற்றும், பன்னீர்செல்வம் உருவ படங்களுக்கு திதி கொடுத்துள்ளனர்.

ad

ad