புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்ய புதிய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை உறுதிசெய்யும் வகையில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் 2009ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும் நோக்கில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாகவும்,  முன்னர் அந்த காணியிலிருந்தவர்களுக்கு அக்காணிகள் சொந்தமாகும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடைமுறையிலுள்ள ஆட்சி உரிமை சட்டத்தின் பிரகாரம் 10 வருடங்களுக்கு குறையாமல் ஒரு காணியில் இருப்பவர்களுக்கே அக்காணி சொந்தம் என்ற சரத்தினால் வட, கிழக்கு மக்களுக்கு அநீதி ஏற்படும் நிலையுள்ளது எனவும் அதனை தவிர்ப்பதற்காகவே விசேட திருத்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத நல்லிணக்கத்திற்கான சர்வமத தலைவர்கள் வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர் எனவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad