புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2015

காங்கேசன் சிமெந்து ஆலையை மீள இயக்கும் முயற்சி ஆரம்பம்


காங்கேசன்துறை சிமெந்து ஆலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று
அதிகாரிகள் பார்வையிடுவதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் இன்னும் வழங்கப்படாததன் காரணத்தால் அந்தப் பணியின் ஆரம்பக் கட்டப் பணிகள் தாமதமடைகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
 
தொழிற்சாலையை மீள இயக்கு வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக சிமெந்துக் கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர் மொஹ மட் றியாஸ் ஷாலி தலைமையிலான வல்லுநர்கள் குழு நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருவதாக இருந்தது. எனினும் பாது காப்பு அமைச்சின் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து நிலவும் தாமதம் காரணமாக அந்தப் பயணத்தைப் பிற்போட வேண்டி ஏற்பட்டுள்ளதாக றியாஸ் சாலி தெரிவிததார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனமும் இந்தியாவின் ஜே.கே சீமெந்தும் இணைந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 
 
இது தொடர்பில் எமது குழுவினரும் ஜே.கே சீமெந்தின் நிபுணர் குழுவினரும் திங்கட்கிழமை காங்கேசன்துறைக்கு வருவதற்குத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட எமது பயணம் தொடர்பில் தீர்மானமான முடிவு எட்டப்படவில்லை. 
 
இந்திய நிறுவனமான ஜே.கே. சிமெந்து, 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தில் முதலிடத் தயாராகவுள்ளது. இதன் மூலம் 1500 பேருக்க வேலைவாய்ப்பினை வழங்கமுடியும்.
 
இந்திய நிறுவனங்கள் சமூக அக்கறை கொணடவை என்பதால் ஆலையைச் சுற்றியுள்ள பகுதியில் வைத்தியசாலை, பாடசாலை, மாதிரிக் கிராமம் ஆகியவற்றையும் அமைக்க உள்ளது. இந்தத் திட்டத்தில் மக்கள் விரும்பினால் அவர்களுக்கு மின்சாரம், சுத்தமான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன. 
 
"காங்கேசன்' என்ற பெயரில்த்தான் முன்னர் காங்கேசன் துறையின் சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது கூட்டுத்தாபனம்  மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலும் 'காங்கேசன்' என்ற பெயரிலேயே உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு சந்தைப்படுத்தப்படும்.  
 
உற்பத்திகளில் 5d7 மெற்றிக் தொன் அளவில் உள்நாட்டு மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மொத்தம் 8.2 அமெரிக்கன் தொன் அளவில் உற்பத்திகள் மேற்கொள்ளப்படும். உள்நாட்டு மூலப்பொருள்களை உபயோகிப்பதால் இலங்கைக்கு வருடமொன்றுக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிப்பாக அமையும். 
 
தயாரிக்கப்படும் உற்பத்திகள் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஐரோப்பாவின் உயர் தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
கடந்த வருடம் கோத்தபாய ராஜபக்ச­ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது ஜே.கே. நிறுவனத்தினர் காங்கேசன்துறைக்குச் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி கோரினர். 
 
அனுமதி அளித்த கோத்தபாய இந்த இடத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' எனத் தெளிவாகக் கூறியிருந்தார். 
 
ஆட்சிமாற்றத்தை அடுத்து பஸ்நாயக்க பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் நாம் திங்கட்கிழமை காங்கேசன்துறைக்கு செல்வதற்கு கோரியிருந்த அனுமதி கிடைக்கவில்லை. 
 
எமது நிலத்திற்கு நாங்கள் செல்வதற்கு இயலாத நிலையே காணப்படுகின்றது. தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டால் போராட்டம் நடத்தி காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மீள இயக்குவேன்- என்றார்.

ad

ad