புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2015

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? - கோத்தாபாயவுக்கும் அழைப்பாணை!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். 

எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் மஹிந்தவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ள ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சுப் பதவியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை நடத்தவே மஹிந்த அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், என்ன முறைப்பாடு யார் முறைப்பாடு செய்தார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் ஊடாக இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தாபாயவிற்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவிற்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனம் மற்றும் ரக்னலங்கா பாதுகாப்பு சேவை தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு ஆஜராகுமாறு கோத்தாபாய ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தாபாயவின் சொத்து தொடர்பான ஆவனங்கள் ஏற்கனவே குற்றபுலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ad

ad