புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2015

மணல் பெறுவதில் இடர்: தீர்க்குமாறு கோரிக்கை


யாழ்.மாவட்டத்தில் கட்டட நிர்மாணத்துக்குப் பயன்படுத்தும் மணலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தெரிவிக்கும் கட்டட
நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருப் போர், ஆகக் கூடிய விலை கொடுத்து தரம் இல்லாத மணலைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
யாழ்.மாவட்டத்தில் கட்டட நிர்மாணப் பணிகளுக்கு வல்லிபுரக் கோயில் பகுதி மற்றும் நாகர்கோயில் பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட மணல் பயன்படுத்தப்பட்டு வந்தது. 
 
இந்த மணல் விநியோகம் கடந்த ஆண்டு இறுதிவரை அரசியல் கட்சி சார்ந்த நிறுவனம் ஒன்றால் விநியோகிக்கப்பட்டு வந்தது. அந்த நடவடிக்கை கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் தடைப்பட்டது.
 
தற்போது கட்டட நிர்மாணத்துக்குத் தேவையான மணலுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அதிக விலை கொடுத்துப் பெறப்படும் மணல் கட்டட நிர்மாணத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட மணல் அல்ல என்றும், உவர்த் தன்மை கொண்டதாகவும், நெற்செய்கை நிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இவற்றைக் கருத்தில் கொண்டு மணல் விநியோகத்தை உரிய முறையில் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ad

ad