புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2015

முதலைக்கு இரையாகி சிறுவன் சாவு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவன்
முதலைக்குப் பலியாகியுள்ளார்.
 
இன்று காலை குறித்த மூன்று சிறுவர்களும் குளக்கரையில் நீராடிக்கொண்டிருக்கும் போது, நீரினுள் மறைந்திருந்த முதலையொன்று அதிசயராஜா ஜெயராஜ் (13) என்ற சிறுவனை இழுத்துச் சென்றுள்ளது. 
 
சிறுவனின் சகோதரன்  குளிக்கச் சென்ற தனது தம்பியை தேடிச் சென்றபோது ஏனைய சிறுவர்கள் இருவரும் தங்களுடன் நீராடிய நண்பனான ஜெயராஜை முதலை இழுத்துச் சென்றது பற்றிக் கூறியுள்ளனர். 
 
அதன் பின்னர் குளத்தில் தேடியதில் முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 
 
 
சிறுவனின் இடது கால் முறிந்துள்ளதோடு உடலில் ஆங்காங்கே காயங்களும் காணப்படுகின்றன.
 
 கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 
 இச் சிறுவனின் தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad