புதன், ஏப்ரல் 08, 2015

யெமன் தாக்குதலுக்கு சவ+தி கூட்டணிக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் விரைவு


அதென் நகர வீதியில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குண்டு போட்டு வரும் சவ+தி அரே பியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயு தங்கள் வழங்குவதை அமெரிக்கா துரிதப் படுத்தியுள்ளது. இந்த கூட்டணியுடன் அமெரிக்கா உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாக அமெரிக்க இராஜhங்க துணைச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

யெமனின் துறைமுக நகரான அதெனின் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து வருவ தாக உதவி அமைப்புகள் எச்சரிக்கை விடுத் துள்ளன. இந்த நகரில் 'pயா ஹவ்தி கிளர் ச்சியாளர்களுக்கும் ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதியின் ஆதரவு படையினருக்கும் இடையில் வீதிகளில் மோதல் இடம்பெற்று வருகிறது.
கடந்த 15 தினங்களாக இடம்பெற்றுவரும் மோதல்களில் சுமார் 550 பேர் வரை கொல் லப்பட்டுள்ளனர். இந்த காலத்தில் சுமார் 2,000 பேர் வரை காயமடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தவிர, மோதல்களில் குறைந்தது 74 சிறு வர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சிறுவர்களுக் கான ஐ.நா. அமைப்பு தகவல் அளித்துள் ளது. இதில் 100,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அதென் நகரின் நிலைமையை விபரித்தி ருக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சா ளர் ஒருவர், 'குறைந்தது அங்கு பேரழிவு நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிட முடியும்" என்றார். 'அதென் நகர யுத்தம் ஒவ்வொரு வீதிகள், முனைகளிலும் இடம்பெற்று வருகி ன்றன" என்று குறிப்பிட்ட செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர், பெரும்பாலானவர்களுக்கு தப்பிவர முடியாத நிலை இருப்பதாக தெரி வித்தார்.
ஏனைய பல உதவி அமைப்புகள் போன்று அதென் நகருக்கு மருத்துவ பொருட்கள் மற்றும் தொண்டுப் பணியாளர்களை அனுப்ப செஞ்சிலுவை சங்கம் முயற்சித்து வருகிறது. அதென் நகரில் கடந்த மார்ச் மாதம் ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் முன்னேற ஆரம் பித்தது தொடக்கம் அங்குள்ள துறைமுகங் கள் பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட நிலை யிலேயே உள்ளன. ஹவ்திக்கள் முன்னேறி யதை அடுத்து அதென் நகரில் தஞ்சமடைந் திருந்த ஜனாதிபதி ஹதி சவ+தி அரேபியா வில் அடைக்கலம் பெற்றார்.
அதென் நகர மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் கடத் தப்பட்டு வீதிகளில் சடலங்கள் சிதறிக் கிடப் பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதனிடையே சவ+தி தலைநகர் ரியாதிற்கு கடந்த செவ்வாயன்று விஜயம் செய்த அமெ ரிக்க இராஜhங்க துணைச் செயலாளர் அன் டனி பிளிங்கன், சவ+தி கூட்டணிக்கு ஆயுதம் வினியோகிப்பதை அமெரிக்கா துரிதப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார். இந்த முன்னெடு ப்பு மூலம், ஹவ்தி மற்றும் அவர்களது கூட ;டணியினருக்கு படை பலத்தைக் கொண்டு யெமனில் ஆட்சி நடத்த முடியாது என்ற வலுவான செய்தியை சவ+தி அரேபியாவுக்கு சொல்ல முடியும் என்று பிளிங்கன் தெரி வித்தார்.
தவிர, சவ+தி கூட்டணியுடன் அமெரிக்கா உளவுத் தகவல்களை பரிமா றிக் கொள்வதாகவும் சவு+தி அரேபியாவின் நடவடிக்கை களை ஒருங்கிணைக்க மையம் ஒன்று நிறுவப்படுவ தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய யெமனின் இப் நகருக்கு அருகில் இருக்கும் இராணுவத் தளம் ஒன்றின் மீது சவ+தி கூட்டணி நேற்று முன்தினம் வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட யெமன் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலெஹ்வின் ஆதரவு படையினரை இலக்கு வைத்தே வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சலெ ஆதரவு படையினர் ஹவ்திக்களுடன் இணை ந்து ஹதி அரசுக்கு எதிராக போராடுகின் றனர். எனினும் சவ+தி கூட்டணியின் வான் தாக்கு தல் பாடசலை ஒன்றுக்கு அருகிலேயே நடத் தப்பட்டுள்ளது. இதில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அதென் நகரில் இருக்கும் சவ+தி அதிகாரி ஒருவர், ஹவ்தி கூட்டணியுடன் தொடர்பு டைய இலக்கின் மீதே தாக்குதல் நடத்திய தாக தெரிவித்தார். முன்னதாக அதென் நகரின் செஞ்சிலுவை சங்க தலைவர் ரொபட் கோசன் பி.பி.சிக்கு தொடர்பு கொண்டு குறிப்பிடும்போது, அந்த நகர் வெறிச்சோடி காணப்படுவதாக குறிப்பிட் டார். 'பெரும்பாலானவர்கள் மருத்துவமனைக்கு இறந்த நிலையிலோ அல்லது மருத்துவ மனையில் இறக்கும் நிலையிலோ அழைத்து வரப்படுகின்றனர்.
மருத்துவமனையில் போதிய மருந்து களோ, மரத்துவர்களோ இல்லை" என்று ரொபட் கோசன் குறிப்பிட்டார். அதென் நகர மணவரான நிஸ்மா அலொ சபி, வன்முறை குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைத்தொகுதிகள் வரை பரவியிருப்பதாக தெரிவித்தார். 'மக்கள் தனது உடைமைகள் மற்றும் அவர்களது பாதுகாப்பு பற்றி பயப்படுகிறார் கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டெம்பரில் தலைநகர் சனாவை ஹவ்திக்கள் கைப்பற்றியதை அடுத்து ஜனா திபதி ஹதி அங்கிருந்து தப்பி அதென் நக ரில் அடைக்கலம் பெற்றார். எனினும் தற் போது அதென் நகரிலும் ஹவ்தி கிளர்ச்சி யாளர்கள் முன்னேறியுள்ளனர். ஊழல் மிக்க ஹதி அரசை மாற்றுவதே தமது இலக்கு என்று ஹவ்தி கிளர்ச்சியாளர் கள் குறிப்பிடுகின்றனர். ஹவ்திக்களுக்கு பிராந்தியத்தின் 'pயா பெரும்பான்மை நாடான ஈரான் உதவுவதாக சவ+தி குற்றம் சாட்டி வருகிறது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் விஜயம்

யெமனில் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈரான் வெளியுற அமைச்சர் முஹ மது ஜhவத் சாரிப் நேற்று புதன்கிழமை பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண் டுள்ளார்.  யெமன் 'pயா ஹவ்தி கிளர்ச்சியாளர் களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சவ+தி அரேபியா தலைமையிலான கூட் டணி நாடுகளில் இணையுமாறு பாகிஸ் தானுக்கு சவ+தி அழைப்பு விடுத்துள்ளது. எனினும் சாரிப்பின் விஜயத்தில் இந்த அழைப்பை பாகிஸ்தான் மறுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
யெமனில் நீடிக்கும் மோதல் ஆயுத சக்தியால் அன்றி பேச்சுவார்த்தை மூலமே முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது. யெமன் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் 'ரீப் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தார். எனினும் யெமன் யுத்தத்தை ஈரான் தனது பிராந்திய பலத்தை விரிவு படுத்த பயன்படுத்துவதாக ஒருசில நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
"பிராந்தியத்தின் பாதுகாப்பற்ற நிலையை தடுத்து ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த அனைத்து நாடுகளும் ஒன்றாக செயற்பட வேண்டும்" என்று சாரிப் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார். யெமனின் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் சுன்னி பெரும்பான்மை நாடான பாகிஸ்தான், கூட்டணியில் சேர்ந்து அதன் யுத்த கப்பல்கள், துருப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று சவ+தி உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தது.