புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

போல்ட்டின் அதிரடியில் ஐதராபாத் வெற்றி: மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்


பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8வது ஐ.பி.எல் தொடரின் 27வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
மொகாலியின் பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்க வீரரான ஷிகர் தவான் 1 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹனுமா விகாரியும் 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் வார்னர் நிலைத்து நின்று அரைசதம் கடந்து 58 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ஹென்ரிக் 30 ஓட்டங்களும், நமன் ஓஜா 28 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் ஆஷிஸ் ரெட்டி 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது.
பந்துவீச்சில் பஞ்சாப் சார்பில் மிட்செல் ஜான்சன், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 151 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக ரித்திமான் சாகா 42 ஓட்டங்களும், அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி 22 ஓட்டங்களும், ஆக்சர் படேல் 17 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் ஐதராபாத் சார்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டும், புவனேஷ்குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
19 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய போல்ட் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad