புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

நெல்லையில் தேவாலயத்தன் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி: 12 பேர் மீட்பு



திருநெல்வேலியின் புதிதாக கட்டப்படும் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் கட்டப்படும் தேவாலயத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

கட்டட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கருணாகரன், காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார்.

ad

ad