புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015

மே 16.2009
இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் மிகவும் நெருக்கடியை சந்தித்து இருந்தால் எந்த நகர்வுகளையும் எங்களாலும் கூட இருந்தவர்களினாலும் எடுக்க முடியவில்லை. அந்தளவிற்கு உக்கிரமாக கொடிய தாக்குதல்களை மக்கள் மீது திணித்து விட்டிருந்தது சிங்களப்படைகள். உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி பலநாட்கள் அங்குமிங்குமாக தவித்த எங்களுக்கு இன்று விசப்புகையினை மாத்திரமே சுவாசிக்க முடிந்ததால் கூட வந்த பலர் மயக்க நிலையில் காணப்பட்டனர். அவர்களை அந்த நிலையில் எங்களால் அழைத்து போக முடியாத நிலையில் இருந்தோம். உணவின்றி நீரின்றி நடக்க முடியாத நிலையில் காணப்பட்டனர். திரும்பும் திசையெல்லாம் கண்ணுக்கு எந்த இடமும் தெரியவில்லை எல்லா இடங்களும் புகைமண்டலமாகவே காணப்பட்டது. எங்களுடன் 121பெண்போராளிகள் உட்பட ஆண்போராளிகள் 43 பேரும் பொதுமக்கள் 18 பேரும் இருந்தனர். அதில் காயம்பட்ட பெண்போராளிகள் வேகமாக பாதிக்கப்பட்டனர். இரத்த ஓட்டம் உணவின்றிய சோர்வு என கந்தக காற்றின் விசவாயு சுவாசம் என அவர்களை நினைவிழக்க செய்திருந்த்து.
ஒருவாறாக ஒரு வீட்டில் கிணற்றில் நீர் கிடைத்த நிலையில் அண்ணா மற்றும் கூட இருந்த போராளிகள் பலர் உதவியுடன் நீர் கொடுத்தனர். அப்போது பலருக்கு உயிர் போயிருந்த நிலையில் காணப்பட்டனர். அத்தனைபேரும் காயப்பட்ட போராளிகளின் உயிர் போயிருந்தது . அப்போது இன்னும் ஓர் துயரச்சம்பவம் அந்த வீட்டில் காண கூடியதாக இருந்தது. அது ஒரு இளம் குடும்பமாக இருக்கலாம். கணவன் மனைவி முப்பது வயது மதிக்க தக்கவர்கள். அதோடு இளம் பெண் 15 வயது மதிக்க தக்கவர்கள் எல்லோரும் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டு கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு இருந்தனர். அதன் பிறகு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முடிவு எடுத்தோம். கிட்டத்தட்ட அந்த இருபது நிமிட இடைவெளியில் கூட இருந்தவர்களில் 35 பேர் இறந்து இருந்தனர். பெண்கள் 24 பேர் உயிர் போயிருந்தது.
ஒருவாறாக வெளியேற முற்பட்ட எங்களுக்கு மீண்டும் துயரம் காத்திருந்த சம்பவம் அது எங்கள் பின்பகுதியால் சென்றிருந்த சிங்கள படை பொதுமக்கள் வெளியேறும் பாதையை நோக்கி எறிகணைத் தாக்குதல் தொடுத்தது. இதனால் கூட்டமாக சென்ற மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் எங்கள் குழுவில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் மாண்டு போயினர்.
இப்படி எத்தனை காட்சிகள் எத்தனை துயரங்கள் தாண்டி வந்மோம். மறக்க முடியுமா. காலம் ஓடிப்போகலாம் மனதில் இருக்கும் வடுக்களும் உடலில் இருக்கும் காயங்களின் தழும்புகளும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.
பவித்ரா_தமிழினி

ad

ad