புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

20 இல் 15 முக்கிய அம்சங்கள் சிறுபான்மை நலன் கருதியே ஆசனங்கள் அதிகரிப்பு


* பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு
* தொகுதி, பல்தொகுதிமுறை அறிமுகம்
* விருப்பு வாக்குமுறை ரத்து
* தேர்தல் மறுசீரமைப்பை பூர்த்தி செய்ய ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் குழு
15 அம்சங்கள் உள்ளடங்கும் வகையில் புதிய 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதுகாக்கும் வகையிலே இதில் எம்.பிகள் தொகை 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரை களடங்கிய புதிய யோசனைகள் ஜனாதிபதி, பிரதமர், சிறுபான்மை கட்சிகள் அடங்கிய விசேட குழுவினால் ஆராயப்பட்டு அடுத்த அமைச்சரவையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் 20 ஆவது திருத்தம் குறித்து வினவப்பட்டது. இதற்குப் புதிலளித்த அவர், புதிய யோசனையிலுள்ள 15 அம்சங்களில் 225 எம்.பிகள் தொகை 255 ஆக உயரும். இது தொடர்பில் எந்த கட்சியும் யோசனை முன்வைக்கவில்லை.
தொகுதி வாரி முறை மற்றும் பல்தொகுதி முறையின் கீழ் 165 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதோடு எஞ்சிய 90 பேரும் மாவட்ட விகிதாசார முறை மற்றும் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
தேசியப் பட்டியல் எம்.பி. தொகை குறைக்கப்படும். மாவட்ட விகிதாசார முறை மூலம் தெரிவாகும் தொகையில் எஞ்சிய தொகை தேசிய பட்டியல் எம்.பிகளாக தெரிவாகும்.
இரு வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத்துமாறும் புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கு முழு ஆதரவு கிடைக்கவில்லை. எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவும் பெண் உறுப்பினர்களுக்கு 5 முதல் 10 வீத இட ஒதுக்கீடு வழங்கவும் மாவட்ட விகிதாசார முறையின் கீழ் 1/3 பெண்களை உள்வாங்கவும் தேசிய பட்டியல் வழங்குகையில் கூடுதல் அதிகாரம் வழங்கவும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இன விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.
20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும். அதற்கு முன்னர் தகவலறியும் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் என்பனவும் நிறைவெற்றப்படும்.
ஜனாதிபதி, பிரதமர் சிறுபான்மை கட்சிகள் 20 ஆவது திருத்தம் குறித்து ஆர்வமுள்ள அமைச்சர்களடங்கிய விசேட குழு 15 அம்சங்களையும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது என்றார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய 4 எம்.பிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
இதனால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது. இதற்கு பகரமாக எதிர்த்தரப்பில் இருந்து மேலும் எம்.பிகள் எம்முடன் இணைய இருக்கிறார்கள் என்றார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
சகல அதிகாரங்களுடனும் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் எதிர்க்கட்சி எம்.பியாக பாராளுமன்றத்தில் அமர மாட்டார்கள். அவருக்கு அந்தளவு தலையில் குழப்பமிருக்காது. சகல சலுகைகளையும் கைவிட்டு எம்.பி.யாக வர மாட்டார் என நம்புகிறோம் என்றார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பதிலளித்த அவர்,
20 ஆவது திருத்தமா தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையா எது வேண்டுமென முடிவு எடுக்குமாறு அமைச்சரவையில் பிரதமர் கூறியிருந்தார். தமக்கெதிரான நீதிமன்ற வழக்குகளை பின்போடவே இவ்வாறு பிரேரணைகளை முன்வைத்து பாராளுமன்றம் கலைக்கப்படுவதை சில எம்.பிகள் விரும்புகின்றனர்.
20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது. தேசியப் பட்டியல் எம்.பி. தொகை குறைக்கப்படும். மாவட்ட விகிதாசார முறை மூலம் தெரிவாகும் தொகையில் எஞ்சிய தொகை தேசிய பட்டியல் எம்.பிகளாக தெரிவாகும்.
இரு வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத் துமாறும் புதிய யோசனை முன்வைக் கப்பட்டது. அதற்கு முழு ஆதரவு கிடைக்கவில்லை.
எல்லை நிர்ணய ஆணைக்குழு வொன்றை நியமிக்கவும் பெண் உறுப்பினர்களுக்கு 5 முதல் 10 வீத இட ஒதுக்கீடு வழங்கவும் மாவட்ட விகி தாசார முறையின் கீழ் 1/3 பெண்களை உள்வாங்கவும் தேசிய பட்டியல் வழங்குகையில் கூடுதல் அதிகாரம் வழங் கவும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இன விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆழமாக ஆராயப் பட்டது.
20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும். அதற்கு முன்னர் தகவலறியும் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் என்பனவும் நிறைவெற்றப்படும்.
ஜனாதிபதி, பிரதமர் சிறுபான்மை கட்சிகள் 20 ஆவது திருத்தம் குறித்து ஆர்வமுள்ள அமைச்சர்களடங்கிய விசேட குழு 15 அம்சங்களையும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது என்றார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய 4 எம்.பிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
இதனால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது. இதற்கு பகரமாக எதிர்த்தரப்பில் இருந்து மேலும் எம்.பிகள் எம்முடன் இணைய இருக்கிறார்கள் என்றார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
சகல அதிகாரங்களுடனும் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் எதிர்க்கட்சி எம்.பியாக பாராளுமன்றத்தில் அமர மாட்டார்கள். அவருக்கு அந்தளவு தலையில் குழப்ப மிருக்காது. சகல சலுகைகளையும் கைவிட்டு எம்.பி.யாக வர மாட்டார் என நம்புகிறோம் 

ad

ad