புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

23-ந்தேதி ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்பு; மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள் பங்கேற்பு?

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் அவர்
கடந்த 7 மாதமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆனார். இதைத் தொடர்ந்து 7 மாத இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் தீவிர அரசியலுக்கு வர உள்ளார்.
நாளை மறுநாள் (22-ந்தேதி வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை யில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (முதல்வராக) தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வார். அவரது விலகல் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளும் கவர்னர் ரோசய்யா ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுப்பார். கவர்னர் அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொள் வார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்கும் கோலாகலம் தொடங்கும். இந்த விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், தலைமை செயலாளர் ஞானதேசிகன், பொதுப்பணித்துறை செயலாளர் ஜித்தேந்திரநாத், போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 22 மற்றும் 23-ந்தேதிகளில் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆய்வு நடந்தது.
ஜெயலலிதா 23-ந்தேதி (சனிக்கிழமை) முதல்- அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா அன்று காலை 11 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்ட பத்தில் நடைபெற உள்ளது. கவர்னர் ரோசய்யா, ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணமும் ரகசியம் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். ஜெயலலிதாவைத் தொடர்ந்து புதிய அமைச்சர வையும் பதவி ஏற்கும். 32 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படு கிறது. அமைச்சரவையில் இரண்டு அல்லது மூன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று தெரி கிறது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும் விழாவை மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மூத்த மத்திய மந்திரிகள் சிலர் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகி யுள்ளது. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உள்பட பிற மாநிலங்களை பல்வேறு கட்சியினரும் சென்னை வர உள்ளனர். அவர்கள் ஜெயலலிதாவுக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.
புதிய அரசு பொறுப்பு ஏற்பது போல மிகவும் எழுச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் விழாவை நடத்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஏற்பாடு கள் செய்து வருகிறார்கள்.

ad

ad