புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இடம் தரப்பட வேண்டும்: பெண்கள் அமைப்பு கோரிக்கை


நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசியல் கட்சிகள்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்ற போது பெண்கள் மற்றும் ஊடக கூட்டு அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்களின் கீழ் பெண்களுக்கு அரசியல் சமவுரிமை வழங்கப்படுதல் அவசியம் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் அனைத்து பிரஜைகளுக்கும் இனம், மதம், சாதி என்று பார்க்காமல் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். 1931ஆம் ஆண்டு இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. எனினும் உள்ளுராட்சி சபைகளிலும் நாடாளுமன்றத்திலும் சிறிய தொகை பெண்களே உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர்.
எனவேதான் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பான சர்வதேச தரப்பட்டியலில் 153 நாடுகளில் இலங்கை 140 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் சனத்தொகையில் பெண்கள் 52 வீதமாக உள்ளனர். எனினும் அவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் அனைத்து இடங்களிலும் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலின் போது தொகுதிவாரி, மாவட்டவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைகளின் கீழ் 25 வீதப்பெண்கள் இந்த தடவை நாடாளுமன்றத்துக்கு செல்ல வழியேற்படுத்தப்பட வேண்டும் என்று பெண்கள் மற்றும் ஊடக கூட்டு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ad

ad