சனி, மே 02, 2015

யாழில் மாபெரும் மே தினப்பேரணி
வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் பாரம்பரிய மே தினப்பேரணி இன்று மாலை 2 மணியளவில் நல்லூர் சங்கிலியன் சிலையருகில் இருந்து ஆரம்பமாகி யாழ்.வீரசிங்கம்  மண்டபத்தில் நிறைவு பெற்றது.
குறித்த பேரணியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினால் உழைப்பாளர் தினம் இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டிருக்கின்றது.
நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்திலிருந்து உலக தொழிலாளர் தினத்தை நினைவுபடுத்தும் வகையில் ஊர்திகள் சகிதம் ஆரம்பமான தொழிலாளர் தின ஊர்வலம், பிற்பகல் 1.30மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து  வைக்கப்பட்டது.
அங்கிருந்து நல்லூர் ஆலயத்தை பருத்துறை வீதி ஊடாக அடைந்து, பின்னர் ஆரியகுளம் சந்தியை அடைந்த ஊர்வலம், பின்னர் யாழ்.நகருக்குள் வந்து காங்கேசன்துறை வீதி ஊடாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.
வீரசிங்கம் மண்டபத்தில் தொடர்ந்து உலக தொழிலாளர் தினத்தை ஒட்டிய எழுச்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் வடமாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் எழுச்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த நிலையில் வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் கூட்டுறவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்ததுடன் 5 மாவட்டங்களையும் பிரதான தொழில்களையும் பிரதிபலிக்கும் ஊர்திகளும் இன்றைய தினம் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டிருந்தன.
இதேவேளை எழுச்சி கூட்டத்தில் மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் உரையாற்றினர். மேற்படி கூட்டம் மாலை 6 மணிவரையில் நடைபெற்றது.