புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு: கர்நாடக அரசு அறிவிப்பு

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நேற்று  தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் முடிவு தீவிரமாக எதிர்நோக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பெங்களூருவில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் 3 அல்லது 4 நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். சிறப்பு வக்கீல் ஆச்சார்யா, அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார் ஆகியோரின் ஆலோசனை பெறப்படும். 919 பக்க தீர்ப்பு விவரங்களை ஆராய்ந்து வருகிறோம். இந்த பணி முடிந்த பிறகு உரிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.

ad

ad