புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2015

ஆந்திராவில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 852-ஐ தாண்டியது


ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. அங்குள்ள, கடலோர மாவட்டங்களான விழியாநகரம், விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, வடக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் இன்று வெயில் கடுமையாக வாட்டியது. அனல் காற்றும் கடுமையாக இருந்தது.

இதுவரை அக்னி வெயிலுக்கு ஆந்திராவில் 852-பேருக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். குறிப்பாக, பிரகாசம் மாவட்டத்தில் மட்டும் 202 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு நாட்களுக்கு இந்த வெயில் தொடரும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் ராயலசீமாவின் சித்தூர் மற்றும் குர்னூல் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. அக்னி வெயிலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க ஆந்திர துணை முதல்வர் மற்றும் உள்துறை மந்திரி சின்ன ராஜப்பா உத்தரவிட்டுள்ளார். வெப்பக் காற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சையை வழங்குவதற்கு மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

ad

ad