புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2015

பசில் அமைச்சராக செயற்படுவதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை!- சட்டத்தரணி ஜயம்பதி
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச கிறீன் கார்ட் உரிமையாளர் என்பதனால் அமைச்சர் பதவி பெறுவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கமைய இரண்டை பிரஜாவுரிமை கொண்டுள்ள ஒருவர் பாராளுமன்ற அமைச்சராக செயற்பட முடியாதென சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதற்கமைய பசில் ராஜபக்ச இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ள ஒருவர், அமைச்சராக செயற்பட முடியாதென பாராளுமன்றத்தில் விவாதிக்கும் நிலை உருவாகியது.
குறித்த சந்தர்ப்பத்தில் சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, பசில் ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளமையினால் அவருக்கு பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad