புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

சென்னையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக மாநாடு : தமிழக அரசியற் பிரமுகர்கள் பங்கெடுப்பு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடகவியலாளர் மாநாடொன்று சென்னையில் இடம்பெற இருக்கின்றது.
நியூ யோர்க்கில் இருந்து இணையவழி காணொளி பரிவர்த்தனையூடாக இடம்பெறுகின்ற இச்செய்தியாளர் மாநாடு , மே5ம் நாள் புதன்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் கூடத்தில் மதியம் 11:30 மணிக்கு இடம்பெறுகின்றதென நா.தமிழீழ அரசாங்கத்தின்  ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதானமாக சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வெளிவரவிருக்கின்ற நிலையில்,அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவினை பராப்படுத்துமாறு ஐ.நாவைக்கு கோரும் கையெழுத்து இயக்கம் தொடர்பில் இம்மாநாடு இடம்பெறவிருக்கின்றது.
தோழர் கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), தோழர் வேல் முருகன் ( தமிழக வாழ்வுரிமைக் கட்சி), தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஹைதர் அலி (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்), அருட்தந்தை குழந்தைச்சாமி , கே.பிரபாகரன் ( மாணவர் கூட்டமைப்பு) ஆகிய தமிழகத்தின் சமூக-அரசியற் பிரமுகர்களும் பங்கெடுத்து தங்களது தோழமையினைத் இக்கையெழுத்து இயக்கத்துக்கு தெரிவித்துக் கொள்ள இருக்கின்றனர்.
சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் ஈழத்தமிழர்களது விடுதலைப் போராட்டமும் குறித்தான சமகால நிலைவரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலான பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கருத்துக்களோடு செய்தியாளர்களது கேள்விகளுக்கும் பதில் அளிக்க இருக்கின்றார்.
இம்மாநாடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் சரசுவதி அவர்களது தலைமையில் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

ad

ad