புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2015

பணமும் போச்சு; படமும் போச்சு; அவளும் போய்விட்டாள்; உயிர் மட்டுமே இருக்கிறது: நடிகர் பேச்சு


நடிகர் சந்தானம், நாயகனாக நடித்து தயாரித்துள்ள, 'இனிமே இப்படித்தான்' படத்தின், பாடல் வெளியீட்டு விழா
, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு பேசியதாவது:

'மன்மதன்' படத்தில், சந்தானத்தை அறிமுகம் செய்தேன். மற்றவர்களுக்கு விருப்பம் இல்லை. இந்த பையனிடம் நல்ல திறமை இருக்கிறது; சினிமாவில் நல்ல இடத்துக்கு வருவார் எனச்சொல்லி நடிக்க வைத்தேன். சந்தானம் முன்னணி நடிகரானது, சந்தோஷமாக உள்ளது.

இந்த உலகத்தில் தட்டிவிட நிறைய பேர் உள்ளனர்; தட்டிக் கொடுக்க சிலர் மட்டுமே உள்ளனர். நான் சின்ன வயதில் இருந்தே, கஷ்டம் என்றால், என்னவென்று தெரியாமல் வளர்ந்தவன். என் படங்கள் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டுகளில், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

நான் சம்பாதித்த பணத்தை அம்மாவிடம் கொடுத்தேன். ஆனால், இப்போது, அம்மாவிடம் செலவிற்கு பணம் கேட்க கஷ்டமாக இருக்கிறது. நிறைய பேர், நான் ஆன்மிகத்திற்கு போய்விட்டேன் என, சொல்கின்றனர். கடவுளை தேடித்தான் சென்றேனே தவிர, 'பிகரை' தேடி செல்லவில்லை.

சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பதை, இந்த இரண்டரை ஆண்டுகள், எனக்கு கற்றுக் கொடுத்தது. இந்த காலத்தில், என்னை விட்டு எல்லாமே போய்விட்டது. என்னிடமிருந்த பணமும் போச்சு; படமும் போச்சு. சரி நமக்காக ஒரு பெண் இருக்கிறாள், அவள் என்றென்றும் நம்முடன் இருப்பாள் என, நினைத்தேன்; அவளும் போய்விட்டாள்.

கல்யாணமாகி குழந்தை பிறந்து, அதோட சிரிப்பை பார்த்தாவது நம் கஷ்டம் போய்விடும் என, நினைத்தேன். அதுவும் இல்லாமல், என்னை கடவுள் சோதித்து விட்டார். எல்லாமே என்னை விட்டு போய்விட்டது, உயிர் மட்டுமே இருக்கிறது. அதுவும், ஒரு காரணத்திற்காக இருக்கிறது. எவ்வளவு கஷ்டங்களை நான் கடந்தாலும், என்னோட ரசிகர்கள் என்னைத் துாக்கி நிறுத்தி உள்ளனர். வெளியிட தாமதமாகி வந்த, என்னோட, 'வாலு' படத்தை, என் அப்பா வாங்கி வெளியிடுகிறார், என்றார்.

ad

ad