புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

வன்புணர்வுக்கெதிரான போராட்டம் வன்முறையாக மாற்றம்! யாழில் பதற்றம்!

CFbxP9uUMAApAjn11119152_813659678718683_3828335980435597056_oயாழ்ப்பாணத்தில் பல்வெறு தரப்பினராலும் பல்வேறு இடங்களின் இன்று புங்குடுதீவு மாணவியின் வன்புணர்வுக்கெதிரான கர்த்தாலுடன் கூடிய ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தப்போராட்டங்களில் சில வன்முறைகளாக மாறி வருகின்றது.


வீதிகளை மறித்து ரயர்கள் எரித்தல் போக்குவரத்துக்களை தடைசெய்தல் நீதிமன்ற கட்டடத்தொகுதி மீதும் கடைகள் மீதும் பொலிஸ் மற்றும் வாகனங்கள் மீதான கல்லெறிகளாகவும் மாறியுள்ளது.இந்த விசமச்செய்ல்களை போராட்டக்கார்களிடையே ஊடுருவியுள்ள சில காடையர்கள் மேற்கொள்வதாக போராட்டக்காரர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மது வெறியினால் மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வுக்கு  எதிராக உணர்வு பூர்வமாக வெளிக்காட்டவேண்டிய எதிர்ப்புக்களை சிலர் மதுவெறியிலும் வேறு நோக்கங்கங்களுடனும் திசைதிருப்புவதாகவும் இதனால் பொதுச்சொத்துக்களுக்கு பாதிப்பு எற்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றக்கட்டடத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட கல்லெறித்தாக்குதலை அடுத்து பொலிசார் கண்ணீர்புகைக்குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
சில ஆர்ப்பாட்டக்கார்களின் கோலங்களையும் நடவடிக்கைகளையும் அவதானிக்கும் போது   உண்மையில் அவர்கள் எதற்கு போராடுகின்றார்கள் வித்தியாவிற்காக வருந்துகின்றார்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நிலமை கட்டுமீறி செல்வதை தடுக்க நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்கள், கலகம் அடக்கும் உபகரணங்களுடன்  விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்

ad

ad