புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

புத்த கொள்கை மரத்து போனதுவோ ஈழத்யமிழனின் சாயல் அதே நிலை அதே எதிரி கடலிலே அழியும் இந்தியா,பங்களாதேஷ் பூர்வீகத்தினர்


பௌத்த இனவாத குழுக்களுக்கு பயந்து மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு படகுகளில் செல்லும் மக்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால், பலர் உண்ண உணவின்றி நடுக்கடலில் படகிலேயே உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரில் 5 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறன.
பான்தாய்கள் - பர்மிய பூர்வீகக் குடிகள்,
பஷுஷ் - சீனா, தாய்லாந்து பூர்வீகத்தினர்,
ரோஹிங்கியா - என பிரதானமாக மூன்று வகையாக‌ முஸ்லிம்கள் அங்கு வாழ்வதாக அறியப்படுகிறது.
இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில் 1956 இல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது.
இந்த நிலையில், 1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது. இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர். அதேபோல் 1996 இல் ஏராளமான பள்ளிவாசல்கள் இடித்துத் தரைமட்டமாகக்கப்பட்டது.
அங்கு வாழ்ந்துவந்த ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
280 பேருக்குமேல் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 1,40,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அன்றிலிருந்து இன்று வரை ரோஹிங்கியா மக்களின் நிலை அங்கு படுமோசமாக உள்ளது.
இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் சூழ்நிலை உள்ளதால் சிறு படகுகளில் மூட்டை போன்று அடைக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு வருகின்றனர்.
அண்டை நாடுகள் அடைக்கலம் தர மறுப்பதால் சிறு பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள் வயோதிகர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டு உயிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
சமீபத்தில் படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோரை அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுகடலில் தத்தளித்தனர்.
பின்னர் மலேசியாவும், இந்தோனேசியாவும் அடைக்கலம் கொடுக்க முன் வந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து சர்வதேச அளவில் கடும் கண்டன குரல் எழும்பி வருகின்றன‌.

ad

ad