புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

ஊ ழலில் திளைத்த காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டது வரவேற்கத்தக்கது: தமிழிசை



 
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,

’’பாஜக முன்னாள் மத்திய மந்திரி அருண்சோரி, பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண் ஜேட்லி ஆகியோரை விமர்சனம் செய்து இருப்பது உள்நோக்கம் கொண்டது. அவர் ஏதையோ எதிர்பார்த்து கிடைக்காத விரக்தியில் இவ்வாறு பேசியுள்ளார்.

ரியல் எஸ்டேட் மசோதாவுக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நில மசோதா பற்றி மக்களிடம் எப்படி தவறான தகவல்கள் பரப்பபட்டதோ, அதே போல ரியல் எஸ்டேட் மசோதாவை பற்றி தவறான தகவல்களை கூறுகிறார்கள். மத்திய அரசு கொண்டுவர உள்ள இந்த ரியல் எஸ்டேட் மசோதா மூலம் மக்களுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். மசோதா நிறைவேற்றப்படும் போது மக்கள் அந்த பலன்களை உணருவார்கள்.

முல்லைப்பெரியாறு அணையில் விவகாரத்தில் கேரளா அரசு சட்டரீதியாக எந்த அனுமதியும் வாங்காமல் கட்டுமான பணிகளை தொடங்கினால் அந்த பணி அப்படியே நின்றுவிடும். எனவே தமிழகத்தில் அதை வைத்து தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற வேண்டாம்.

ஊழலில் திளைத்த காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டு பேரணியாக செல்வது, போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது தான்’’என்று கூறினார்.

ad

ad