புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்: வலுக்கும் போராட்டங்கள்


யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாணவர்களின் ஊர்வலத்துடன் வித்தியாவின் பூதவுடல் மயானத்தை நோக்கிச் செல்கிறது.
வித்தியாவிற்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி வணக்கம்
புங்குடுதீவின் மண்ணில் மகளாய் உதித்து பெற்றாரின் எண்ணங்களுடன் தன்னூர் சக மாணவமாணவிகளுடன் அதிபர் ஆசிரியர்களுடன் வாழும் காலத்தின் தொடர்ச்சியை வித்தியா அனுவிக்க முடியாமல் அவள் புன்னகைக்க முடியாமல் அவள் எதிர்காலக்கனவுகளை நிதர்சனம் ஆக்கமுடியாமல் வெறியர்களாய் பிறழ்வுள்ள பிறவிகளாய் கொடுர மிருகங்களாய் வந்து அவளை உடலை உயிரை சிதைத்து நாளின் கண்ணீர் ஊரெங்கும் பரவிக்கிடக்க அவளை கொன்ற பாவியர்மீது கோபம் கொப்பளிக்க இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட வித்தியாவின் உடலுக்கு பெருமளவான மக்கள் மாணவர்கள் திரண்டுவந்து இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
யாழ் மாவட்ட பா.உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா சி.சிறீதரன் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் வித்தியாவிற்கு வந்து வித்தியாவிற்கு இறுதி விடை கொடுத்தனர்.
மாணவர்கள் போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து  கொட்டும் மழையிலும் மத்தியில் யாழ் அல்லைப்பிட்டி பராசக்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்தி-

ad

ad