புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2015

துடுப்பாட்ட செய்தி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? சேப்பாக்கத்தில் இன்று மோதல்

ஐபிஎல் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் மும்பையிடம் தோற்ற சோகத்தில் உள்ளது.
தொடக்க வீரர்கள் டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்குல்லம் மீண்டும் அதிரடி தொடக்கம் தர வேண்டும். அதே சமயம் ரெய்னா, டுபிளசி எழுச்சி கண்டால் நல்லது.
மேலும், கடைசி கட்டத்தில் கைகொடுக்க அணித்தலைவர் டோனி உள்ளார். கடைசி போட்டியில் 17 பந்தில் 36 ஓட்டங்கள் விளாசிய நேகியும் அசத்தினால் சென்னை வலுவடையும். டுவைன் பிராவோ, ஜடேஜா அதிவிரைவாக ஓட்டங்கள் சேர்க்க வேண்டும்.
சுழற்பந்தில் அஸ்வின் ஜொலிக்கிறார். ஆனால் நெஹ்ரா, மோகித் சர்மா ஓட்டங்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். சரியாக திட்டமிட்டால், இந்தப் போட்டியில் ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தலாம்.
ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்தில் ரஹானே, வாட்சன் அசத்துகின்றனர். நடுகள வரிசையில் மிரட்ட ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.
மேலும் கருண் நாயர் கைகொடுத்தாலும், ஹூடாவின் ஏமாற்றம் தொடர்கிறது. சாம்சன், பால்க்னர் கைகொடுத்தால், சென்னைக்கு தொல்லை அளிக்கலாம்.
வாட்சன், குல்கர்னி, மோரிஸ், பால்க்னர் உள்ளிட்ட வேகங்களுடன் சேர்ந்து பிரவீண் டாம்பே சுழலில் அசத்த தயாராக உள்ளார்.
சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கும். அதே சமயம் கடந்த முறை போல் சென்னையை வீழ்த்த ராஜஸ்தான் அணி பல வியூகங்களை வகுத்திருக்கும்.

ad

ad