புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2015

ரொனால்டோவின் உயர்ந்த உள்ளதை பாராட்டுவோம் நேபாளத்துக்கு நன்கொடை

 
ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. பல நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் போர்த்துக்கல் அணியின் அணித்தலைவரான ரொனால்டோ, நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 8 மில்லியன் சுவிஸ் பிராநக் அல்லது யூரோ 5 மில்லியன் பவுண்டு அதாவது இலங்கை மதிப்பில்  கோடி ரூபாய் நிதியுதவியாக அளித்துள்ளார்.
இந்த தொகை 'சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும் அமைப்பின் மூலம் போய்ச் சேரும்.
மேலும் தனது பேஸ்புக் பதிவில், நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குமாறு ரொனால்டோ கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களும் நேபாள நாட்டுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ad

ad