புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2015

வீரரை விடுவித்ததற்கு பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டு நன்றி தெரிவித்த அணி!


லிவர்பூல் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்ட், அடுத்த சீசனில் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணியில் இணைகிறார்.
கடந்த 17 ஆண்டுகாலமாக லிவர்பூல் அணிக்கு மட்டுமே விளையாடி வந்த ஸ்டீவன் ஜெரார்ட்,  லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணியில் இணைவதால் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டு மேலும் வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
உலகின் மிகச்சிறந்த மிட்பீல்டர்களில் ஒருவரான ஸ்டீவன் ஜெரார்ட்,  கடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தவர். லிவர்பூல் அணி அவரை விடுவித்திருப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணி 18 மாதங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனையொட்டி ஸ்டீவன் ஜெரார்டுக்கும் லிவர்பூல் அணிக்கும் நன்றி தெரிவித்து லாஸ்ஏஞ்சல்ஸ் கேலக்சி அணி பத்திரிகைகளில் முழுபக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

நேற்று லிவர்பூலில் இருந்து வெளிவரும் 'லிவர்பூல் எக்கோ' பத்திரிகையில் வெளி வந்த விளம்பரத்தில், கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்தான்புல் நகரில் ஏ.சி. மிலனை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணி  வென்ற போது, ஸ்டீவன் ஜெரார்டு கோப்பையை தூக்கிக் கொண்டு நிற்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. அதற்கு அருகில் இஸ்தான்புல் நகரில் உருவான லீடர் இப்போது ஜாம்பவனாகி நிற்கிறார். 'லிவர்பூல் அணியின் நம்பிக்கை மிகுந்த கேப்டனை எங்கள் நகருக்கு தந்ததற்கு நன்றி!' என்று லாஸ் ஏஞ்சல் கேலக்சி குறிப்பிட்டுள்ளது. 

வீரர் ஒருவரை விடுவித்ததற்காக மற்றொரு அணி நன்றி தெரிவித்து விளம்பரம் தெரிவித்திருப்பது கால்பந்து உலகில் புதுமையாக கருதப்படுகிறது. 

ad

ad