புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2015

சம்பூர் மீள்குடியேற்ற காணி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நியாயத்தை எடுத்துரைப்போம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் சம்பந்தன்


இடைக்கால தடை குறித்து சம்பந்தன் எம்.பி. திட்டவட்டம்
திருகோணமலை, சம்பூரில் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக காணிகளை விடுவிப்பதற்கு உச்ச நீதி
மன்றம் இடைக்காலத் தடை விதித் துள்ளபோதிலும், நீதிமன்றத்திற்கு நியாயத்தை எடுத்துரைத்து மக்களின் உரிமை பாதுகாக் கப்படுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டுச் சபையினால் தனியார் நிறுவனமொன்றுக்குக் குத்தகைக்குக் கொடுக் கப்பட்டிருந்த காணியை விடுவித்து ஜனாதிபதி விடுத்திருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 21ம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனினும், இது தொடர்பில் நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து மக்களின் பழம்பெரும் உரிமை நிலை நிறுத்தப்படுமென்று சம்பந்தன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“அனல் மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தவிர்ந்த காணிகள் அனைத்தும் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படுமென்று முன்னைய அரசாங்கம் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளது. அது நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்த சம்பந்தன் எம்.பி, குறித்த காணி கபடத்தனமாகத் தனியாருக்கு வழங்கப்பட் டுள்ளதென்றும் அதனை மீள மக்களுக்கு உரித்தாக்குவதற்கான நடவடிக்கையில் பின்னிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
சம்பூரில் மக்களை மீள்குடியமர்த்துவதற் கான காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துவிட்டார். என்வே, இடைக்காலத் தடை குறித்து அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று தெரிவித்த கூட்ட மைப்பின் தலைவர், சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மக்களின் உரிமை பாதுகாக்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
சம்பூரில் மக் களை மீளக்குடி யமர்த்துவதற்காக காணியை விடு விக்கும் வர்த்த மானி அறிவித்த லில் கடந்த ஏழாந்திகதி ஜனாதிபதி கைச்சாத் திட்டார். முதலீட்டுச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணியை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும், பொதுமக்கள் தமது காணிகளைப் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த தனியார் நிறுவனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (15) வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ad

ad