புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2015

ஃபாவின் தலைவர் பதவியிலிருந்து செப் பிளேட்டர் பலவந்தமாக நீக்கப்படுவார்: உச்சக்கட்டத்திற்கு செல்லும் எதிர்ப்பு



ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளமான பிஃபாவின் தலைவர் பதவியிலிருந்து செப் பிளேட்டர் பலவந்தமாக நீக்கப்படுவார் என English Football Association தலைவர் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ரஷ்யா மற்றும் கத்தார் நாடுகளில் உலக கிண்ண கால்பந்து போட்டி நடத்த வழங்கிய வாய்ப்பில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை கிளப்பியது.
இதனிடையே, பிஃபாவின் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றதில், ஜோர்டன் நாட்டு இளவரசரான Ali bin Al Hussein தனது போட்டியிலிருந்த விலக, அதிக பெரும்பான்மை பெற்று செப் பிளேட்டர் 5-வது முறையாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஒருவர் மீண்டும் அந்த பதவியில் வகிக்க கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இது குறித்து பேசிய English Football Association தலைவரான Greg Dyke, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை செய்ய புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.
தற்போதைய ஊழல் குற்றச்சாட்டுகளை விட, மேலும் பல குற்றச்சாட்டுகள் வெளிவர வாய்ப்பு உள்ளதால், அந்த நேரத்தில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள செப் பிளேட்டர் பலவந்தமாக பதவியிலிருந்து நீக்கப்படுவார் என Greg Dyke தெரிவித்துள்ளார்.
பிஃபா தவிர்த்து, செப் பிளேட்டர் வேற எந்த நிறுவனம் அல்லது அமைப்பிற்கு தலைவராக பதவி வகித்து, அவற்றை தீவிரமாக கண்காணித்தால், அந்த பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பார் என Greg Dyke விமர்சனம் செய்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக 7 நிர்வாகிகள் கைதானதை தொடர்ந்து, தற்போது மீண்டும் தலைவராக செப் பிளேட்டர் தெரிவு செய்யப்பட்டதற்கு பிறகும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுவதால் இந்த ஊழல் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.

ad

ad