புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015

புங்குடுதீவு மாணவி படுகொலை : சிவ மங்கையர் அமைப்பு கண்டனம்


புங்குடுதீவில் காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த  கொடூரத்திற்கு
எமது கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாக அகில இலங்கை சைவ மகா சபையின் பெண்கள் பிரிவான சிவமங்கையர் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தில் அரங்கேறி வரும் வாள்வெட்டுக்கள், பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பவற்றின் உச்சக்கட்டமாக மேற்படி மாணவியின் கொடூரக்கொலை இடம்பெற்றுள்ளது.
 
இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரத்துறைகளின் அசமந்தபோக்கு இவ்வாறான கொடூரக் குற்றவாளிகளுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வருகின்றது.
 
இம் மாணவிக்கு நேர்ந்த பேரவலம் எந்தவொரு பெண்ணுக்கும் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். அதேநேரம் கடந்தகாலங்கள் போன்று எந்த சட்டத்தரணிகளும் இவர்களுக்கு ஆஜராகி வாதிட முன்வரக்கூடாது என்தையும் இச்சந்தர்ப்பத்தில் வேண்டிநிற்கிறோம்.
 
மேலும் இப் பள்ளிமாணவிக்கு நடந்த இக்கொடுமைக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கும் நீதிகேட்டு அனைத்து அமைப்புக்களும் ஊடகங்களும் தொடர்ச்சியாக போராட முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
 
போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புபட்டு நடைபெறுகின்ற இக் கொடுஞ்செயல்களை இல்லாது ஒழிப்பதற்கு சமூகத்தின் சகலதளங்களிலும் விழிப்புணர்வும் சட்டத்தை அமுல்படுத்துவோரின் தொடர் நடவடிக்கைகளும் இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும். அதனால் இது தொடர்பாக சமூகத்தை விழிப்புணர்வூட்டும் போராட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் எமது சைவமகாசபையின் பெண்கள் பிரிவான சிவமங்கையர் அமைப்பு அனைவரையும் கரம்கோர்க்குமாறு வேண்டி நிற்கிறது. 
 
அத்தோடு மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுடைய துன்பத்தில் நாமும் பங்கெடுத்து நிற்கிறோம். என இவ் அமைப்பு தெரிவித்துள்ளது. 

ad

ad