புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2015

வித்தியா சம்பவத்தை தொடர்ந்து வெளியிட்ட கருத்துக்களால் மஹிந்த தனது மிலேச்சமுகத்தை உலகிற்கு காண்பித்துள்ளார்.


புங்குடுதீவில் மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள் கூட்டாகக் கண்டனம் வெளியிட்டுள்ளனர். 
 
அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்த்தன மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா ஆகிய மூவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாட்டை இனவாதத்தை தூண்டி மீண்டுமாக பதவியைப் பிடிப்பதற்கான வெட்கக்கேடான செயற்பாடெனவும் சுட்டிக்காட்டினர்.
 
' யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது கற்கள் வீசித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளும் இதேவகையில்  தான் ஆரம்பித்திருந்தனர். இதுவொரு பயங்கரமான நிலையாகும். இந்தவகையில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் சட்டம் ஒரே வகையில் செயற்படுத்தப்படவேண்டும்.  வடக்காக இருப்பினும் தெற்காக இருப்பினும் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமமானவர்கள். சட்டம் ஒழுங்கு பேணப்படவேண்டும். தற்போதுள்ள நிலைமை விரைவில் மாற்றமடையவேண்டும். தற்போது இடம்பெறும் செயற்பாடுகள் நன்கு திட்டமிடப்பட்டவை என்று தெரிகின்றது' என மஹியங்கனையில் கடந்த வியாழன்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மஹிந்த கருத்துவெளியிட்டிருந்தார்.
 
 இந்த ஈனத்தனமான செயற்பாட்டின் மூலமாக மஹிந்த ராஜபக்ஸ தனது மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
 
 தமது குடும்பத்தைச் சேர்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவருக்கு ஏற்பட்ட பேரவலத்தையடுத்து கோபங்கொண்ட மக்கள் இயல்பாக வெளிப்படுத்திய உணர்ச்சிவெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்

ad

ad