புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2015

கருப்பசாமிபாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் - திமுகவிலிருந்து இடைநீக்கம்





திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச்சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பசாமி பாண்டியன் கழகக்கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். 

அதே போல, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

ad

ad