புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

ஜெ. வழக்கு: மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் தலைமை வழக்கறிஞர் பரிந்துரை



ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல்முறையீடு செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம். சட்ட வல்லுநர்களின் ஆய்வுக்கு பின்பே மேல்முறையீடு குறித்து முடிவு எடுக்கப்படும். அரசு வழக்குரைஞர் ஆச்சார்யாவிடமும் ஆலோசனைகள் பெறப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறி இருந்தார். 

இதனைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் ரவீந்தராவ் வர்மா கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். இந்த பரிந்துரை கடிதத்தின் மீது வரும் 21ம் தேதி நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா வழக்கில் ஜூன் முதல் வாரத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad